Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தோத்திரம் இயேசுநாதா


    • தோத்திரம் இயேசுநாதா
    • 1. தோத்திரம் இயேசுநாதா
    • உமக்கென்றும் தோத்திரம் இயேசுநாதா
    • தோத்திரம் செய்கிறோம் நின்னடியார்
    • திரு நாமத்தின் ஆதரவில் !

    • 2. வான தூதர் சேனைகள்
    • மனோகர கீதங்களால் எப்போதும்
    • ஓய்வின்றிப் பாடி துதிக்கப் பெறும்
    • மன்னவனே உமக்கு !

    • 3. இத்தனை மகத்துவமுள்ள
    • பதவி இவ்வேழைகள் எங்களுக்கு
    • எத்தனை மாதயவு நின் கிருபை
    • எத்தனை ஆச்சரியம் !

    • 4. நின் உதிரமதினால்
    • திறந்த நின் ஜீவ புது வழியாம்
    • நின் அடியார்க்குப் பிதாவின் சந்நிதி
    • சேரவுமே சந்ததம் !

    • 5. இன்றைத் தினமதிலும்
    • ஒருமித்துக் கூட உம் நாமத்தினால்
    • தந்த நின் கிருபைக்காய் உமக்கென்றும்
    • ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே !

    • 6. நீரல்லால் எங்களுக்குப்
    • பரலோகில் யாருண்டு ஜீவநாதா
    • நீரேயன்றி இகத்தில் வேறொரு
    • தேட்டமில்லை பரனே !
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 95 times