Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்


    • நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
    • 1. நமது இயேசு கிறிஸ்துவின் நாமம்
    • நானிலமெங்கும் ஓங்கிடவே
    • புனிதமான பரிசுத்த வாழ்வை
    • மனிதராம் எமக்களித்தார் 

    • பல்லவி
    • தேவ கிருபை எங்கும் பெருக
    • தேவனை ஸ்தோத்திரிப்போம்
    • பாவ இருள் அகல
    • தேவ ஒளி அடைந்தோம் 

    • 2. அவரை நோக்கி கூப்பிடும் வேளை
    • அறிவிப்பாரே அற்புதங்கள்
    • எனக்கெட்டாத அறிந்திடலாகா
    • எத்தனையோ பதிலளித்தார் --- தேவ

    • 3. பதறிப்போன பாவிகளாக
    • சிதறி எங்குமே அலைந்தோம்
    • அவரை நாம் தெரிந்தறியோமே
    • அவர் நம்மைத் தெரிந்தெடுத்தார் --- தேவ

    • 4. பலத்த ஜாதி ஆயிரமாக
    • படர்ந்து ஓங்கி நாம் வளர
    • எளிமையும் சிறுமையுமான
    • எமக்கவர் அருள் புரிவார் --- தேவ

    • 5. நமது கால்கள் மான்களைப் போல
    • நடந்து ஓடிப் பாய்ந்திடவே
    • உயர் ஸ்தலத்தில் ஏற்றுகின்றாரே
    • உன்னதமான ஊழியத்தில் --- தேவ

    • 6. பரமனேசு வந்திடும் போது
    • பறந்து நாமும் சென்றிடுவோம்
    • பரமனோடு நீடூழி வாழும்
    • பரம பாக்கியம் பெறுவோம் --- தேவ
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 97 times