Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

இயேசு நேசிக்கிறார்


    • இயேசு நேசிக்கிறார்
    • பல்லவி
    • இயேசு நேசிக்கிறார் - இயேசு நேசிக்கிறார் ;
    • இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
    • தென்ன மாதவமோ! 

    • சரணங்கள்
    • 1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார், 
    • மாசில்லாத பரன் சுதன்றன் முழு 
    • மனதால் நேசிக்கிறார் --- இயேசு

    • 2. பரம தந்தை தந்த பரிசுத்த வேதம் 
    • நரராமீனரை நேசிக்கிறாரென
    • நவிலல் ஆச்சரியம் --- இயேசு

    • 3. நாதனை மறந்து நாட்கழித் துலைந்தும்,
    • நீதன் இயேசெனை நேசிக்கிறாரெனல்
    • நித்தம் ஆச்சரியம் --- இயேசு

    • 4. ஆசை இயேசுவென்னை அன்பாய் நேசிக்கிறார்;
    • அதை நினைந்தவர் அன்பின் கரத்துளெ
    • ஆவலாய்ப் பரப்பேன் --- இயேசு

    • 5. ராசன் இயேசுவின் மேல் இன்ப கீதஞ் சொலில் ,
    • ஈசன் இயேசெனைத் தானெசித்தாரென்ற
    • இணையில் கீதஞ் சொல்வேன் --- இயேசு
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1581 times