Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்னை உண்டாக்கிய


    • என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
    • என்னை உண்டாக்கிய என் தேவாதி தேவன்
    • அவர் தூங்குவதுமில்லை , உறங்குவதுமில்லை (2) 

    • 1. என் மேல் அவர் கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
    • சத்தியத்தின் பாதையிலே நித்தமும் நடத்துவார்
    • பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புவார்
    • பரிசுத்தர் பரிசுத்தர் அவர் பெயரே --- என்னை

    • 2. பெலவீன நாட்களிலே பெலன் தந்து தாங்குவார்
    • பலவித சோதனையில் ஜெயம் நமக்களிப்பார்
    • ஆபத்துக் காலத்தில் அரணான கோட்டையும்
    • கேடகமும் , துருகமும் பெலன் அவரே --- என்னை

    • 3. ஆவியான தேவனுக்கு ரூபமொன்றுமில்லையே
    • ரூபமொன்றுமில்லையதால் சொரூபமொன்றுமில்லையே
    • வாஞ்சையுள்ள ஆத்துமாவின் இருதயந்தன்னிலே
    • வார்த்தையாலே பேசுகின்ற ஆண்டவர் இவர் --- என்னை 
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1087 times