Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

என்னை மறவா


    • என்னை மறவா இயேசு நாதா
    • என்னை மறவா இயேசு நாதா
    • உந்தன் தயவால் என்னை நடத்தும் 

    • சரணங்கள்
    • 1. வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்
    • வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!
    • ஆபத்திலே அரும் துணையே
    • பாதைக்கு நல்லதீபமிதே --- என்னை

    • 2. பயப்படாதே வலக்கரத்தாலே
    • பாதுகாப்பேன் என்றதாலே , ஸ்தோத்திரம்!
    • பாசம் என்மேல் நீர் வைத்ததினால்
    • பறிக்க இயலாதெவரு மென்னை --- என்னை

    • 3. தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்
    • மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!
    • வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்
    • உன்னதா எந்தன் புகலிடமே --- என்னை

    • 4. திக்கற்றோராய்க் கைவிடேனே
    • கலங்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம்!
    • நீர் அறியா தேதும் நேரிடா
    • என் தலைமுடியும் எண்ணினீரே --- என்னை

    • 5. உன்னைத் தொடுவோன் என் கண்மணியைத்
    • தொடுவதாக உரைத்ததாலே ஸ்தோத்திரம்
    • அக்கினியின் மதிலாக
    • அன்பரே என்னைக் காத்திடுமே --- என்னை

    • 6. உனக்கெதிராய் எழும்பும் ஆயுதம்
    • வாய்த்திடாதே என்றதாலே ஸ்தோத்திரம்
    • பறந்திடுமே உம் நாமத்திலே
    • பரனே எனக்காய் ஜெயக்கொடியே --- என்னை

    • 7. என்னை முற்றும் ஒப்புவித்தேனே
    • ஏற்று என்றும் நடத்துவீரே ஸ்தோத்திரம்
    • எப்படியும் உம் வருகையிலே
    • ஏழை என்னை சேர்த்திடுமே --- என்னை
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 5272 times